ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு ஸ்டிக்கர்களை வழங்கும் நிகழ்வு இன்று (14) ஹட்டன் பொலிஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் நடவடிக்கை நீதி நடவடிக்கையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, ஹட்டன் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 21 சாரதிகள் தாமாக முன்வந்து வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் அல்ல என திக் ஓயா ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அறிக்கை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள்போக்குவரத்துக்கு ஏற்ற சாரதிகள் என்று அங்கீகாரம் வழங்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன.