Monday, July 21, 2025
27.2 C
Colombo
வடக்குபுளியங்குளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

புளியங்குளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.

நேற்றையதினம் குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதற்க்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த யானை 24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles