பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் இன்று (07) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் – முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக ஹரிஹரன் யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ். கல்வி உதவி நிதிக்காக இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையான தமன்னா இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட நடிகையான ரம்பாவும் நடன இயக்குனரான கலா மாஸ்டரும் நேற்று (06) யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.