நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஷசீந்திர ராஜபக்ஷ, நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், அன்றைய தினமே நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ரத்னாயக்க வெளியிட்டுள்ளார்.