Friday, January 17, 2025
24.3 C
Colombo
வடக்குடிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - மூவர் கைது

டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு – மூவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது.

வாகனம் மறிக்கப்பட்ட போது பொலிஸாரை உதாசீனம் செய்த சாரதி வாகனத்தின் வேகத்தை அதிகரித்து தப்பிச் சென்றுள்ளார்.

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி சென்ற பொலிஸார் பாடசாலை மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் பிரதான வீதியை அடுத்து மக்கள் நடமாட்டம் குறைந்த வீரவாணி எனும் பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த டிப்பர் ரக வாகனத்தை தடம்புரளச் செய்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டிப்பர் ரக வாகனத்தின் டீசல் மற்றும் டயர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.

அவர்களை கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் கைதுசெய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த டிப்பர் ரக வாகனம் பொலிசார் துரத்தி சென்ற போது இடைவழியே ஏற்றி வந்த மணலை பறித்தவாறு சென்றதுடன் மீதமிருந்த மணல் வாகனம் தடம் புரண்ட இடத்திலேயே கொட்டிக் கிடந்தது.

தடம் புரண்ட வாகனத்தை கனரக வாகனத்தில் உதவியுடன் தூக்கிய பொலிஸார் வீதியில் இருந்த மணலையும் அப்புறப்படுத்தினர்.

இதன்போது பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் ரக வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

பாடசாலை மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த பகுதியில் டிப்பர் ரக வாகனம் சட்டவிரோத மணலுடன் வேகமாக பயணிப்பதாக காங்கேசன்துறை விசேட குற்றத்திடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles