Friday, July 25, 2025
28.4 C
Colombo
மலையகம்மரக்கிளை வீழ்ந்து படுகாயமடைந்த சிறுவன் மரணம்

மரக்கிளை வீழ்ந்து படுகாயமடைந்த சிறுவன் மரணம்

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த மாணவன் சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடற் கூற்று பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles