மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இன்று காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டகாரர்கள் இன்று நாட்டில் சகல பொருட்களுக்கான விலைகள் நாளாந்தம் உயர்ந்துக்கொண்டு செல்கிறன்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூறிய படி எமக்கு 1700 ரூபா வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றது.
ஓரு மணித்தியாலம் தின் பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.