நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முழுவதும் நுவரெலியா வைத்தியசாலையிலும் இடம்பெற்று வருகின்றது . சீருடை அணியாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்கத்தினால் சம்பளத்தை அதிகரிக்காமை தொடர்பாக நாடு முழுவதும் ஏற்பாடு முன்னெடுத்து வருகின்றனர். இன்று நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் அனைவரும் இன்று சிவில் உடை அணியாமல் வைத்தியசாலைக்கு வருகை தந்ததுடன் ஏனைய நாட்களைப் போன்று கடமையாற்றியதையும் காணமுடிந்தது.
தற்போதைய அரசாங்கம் சுகாதார ஊழியர்களை தவறாக வழிநடத்துவதாகவும் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்காமல் இருப்பதாகவும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதேவேளை வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும், சீருடையில் இல்லாவிட்டாலும் பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.