Friday, May 9, 2025
31 C
Colombo
சினிமாஎமி ஜேக்சனுக்கு விரைவில் திருமணம்

எமி ஜேக்சனுக்கு விரைவில் திருமணம்

தமிழில் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜேக்சன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர்.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில, எமி ஜேக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.

இந்தியாவுக்கு சென்று, எமி ஜேக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்த எமி ஜேக்சன், அதற்கு ஒப்புக்கொண்டதையும் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம், விரைவில் எமி ஜேக்சன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles