Sunday, December 7, 2025
28.4 C
Colombo
வடக்குதிருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - சந்தேக நபர் கைது

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு – சந்தேக நபர் கைது

சுமார் 8 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டதுடன் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles