Sunday, March 15, 2026
32.8 C
Colombo
வடக்குகடலில் நீராட சென்ற நபர் மாயம்

கடலில் நீராட சென்ற நபர் மாயம்

மாத்தளன் கடல் எல்லையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (28) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த கடற்பகுதியில் நீராட செல்ல வேண்டாம் என கூறப்பட்ட வேளையிலேயே குறித்த நபர் மற்றுமொரு குழுவினருடன் அந்த கடற்பகுதியில் நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை உள்ளூர் மீனவர்கள், பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles