நுவரெலியா கிரிகரி ஏரியில் நேற்று மாலை விழுந்த நபரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 06.00 மணியளவில் நுவரெலியா கிரிகரி ஏரியில் விழுந்த நாவலப்பிட்டி கட்டபுலாவ ஹரங்கல வத்தையைச் சேர்ந்த 64 வயது ராமன் பத்மநாதன் என்பவரின் சடலம் இன்று காலை நுவரெலியா பொலிஸாரின் உயிர் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சுமார் 06.00 மணியளவில் நுவரெலியா கிரிகரி ஏரிக்கு செல்லும் பாலத்திலிருந்து இனந்தெரியாத நபர் ஒருவர் ஏரியில் விழுந்துள்ளதாக அப்பகுதிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இரு யுவதிகள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் சுமார் 18 மணித்தியாலங்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இன்று காலை 11.00 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலியா தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இறந்தவரின் பணப்பையில் இருந்த தேசிய அடையாள அட்டையில் இருந்து அடையாளம் மற்றும் அவரது தகவல்களை கிடைத்தது என்றும் அதன் மூலம் உறவினர்களை கண்டுபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
நுவரெலியா நீதவானின் ஸ்தல விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சம்பவம் தற்கொலையா அல்லது வேறு காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கருத்து தெரிவித்த தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்