Monday, January 19, 2026
22.8 C
Colombo
வடக்குவவுனியாவில் 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியாவில் 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது.

கடந்த வருடம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் ஆஜர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது.

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா தொகை எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles