யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட வரணி ஈற்றாலே பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் மின்சார அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.