Thursday, February 13, 2025
29 C
Colombo
கிழக்குபிறந்து 13 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி மரணம்

பிறந்து 13 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி மரணம்

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி என்ற பெண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவதினத்தன்று மாலை குழந்தையின் தாய் அவருக்கு பாலை பருக்கிய நிலையில் குழந்தை பால் புரைக்கேறி மரணித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று (23) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles