Sunday, August 24, 2025
26.1 C
Colombo
வடக்குவெற்றிலைக்கேணியில் கோர விபத்து - இருவருக்கு பலத்த காயம்

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து – இருவருக்கு பலத்த காயம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பட்டாரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles