மன்னார் நகர் பகுதியை மையப்படுத்தி இயங்கி வரும் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனமான “மென்ஸ் கொலேஜ்” நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது மன்னார் நகரசபை மண்டபத்தில் மென்ஸ் கொலேஜ் நிறுவனத்தின் முகாமையாளர் நஜ்லா பானு முஹீத் தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது.
குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில புலமையை அதிகரிக்கும் விதமாக வருட வருடம் இடம் பெறும் “spell bee challenge” போட்டியின் கடந்த வருடத்திற்கான போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு குறித்த கெளரவம் வழங்கப்பட்டது.
” 2023 spell bee challenge” போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் புள்ளிகள் அடிப்படையில் சான்றிதல்கள் ,கிண்ணங்கள்,மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் அக்கடமி இணைப்பாளர் மோகன் குரூஸ் , கெளரவ விருந்தினர்களாக துரைராஜா கிறிஸ்டி ராஜா ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கிறிஸ்டி ராஜா ஞானமலர் ஓய்வு நிலை ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மன்/அல்ஹஸ்கார் பாடசாலையின் அதிபர் மாஹீர், மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பிரதி அதிபர் மயூரன், சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பிரதி அதிபர் சுரேன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் 2023 spell bee challeng போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய 91 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.