Friday, January 17, 2025
28.2 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் புகையிரத விபத்து - இளம் குடும்பத்தர் பலி

கிளிநொச்சியில் புகையிரத விபத்து – இளம் குடும்பத்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles