புகழ் பெற்ற மறைந்ந நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் ஆகிய மருது கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜீ.ஆரின்) 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், எம்.ஜீ.ஆரின் 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள M.G.R சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் க.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வல்வெட்டித்துறையின் நகரசபையின் நகரமுதல்வர்
ம. சுந்தரலிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவேந்தலில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரையும் நிகழ்த்தப்பட்டது. மாணவர்களின் கவிதைகள், பாடல்கள், சிறுகதை என்பன இதன்போது இடம்பெற்றன.
இந்நிகழ்வினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால், பொருளாதார ரீதியாக பின்தாங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்கான அப்பியாசப்கொப்பிகளும், பாடநூல்களும் 107 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் உப தலைவர்,செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.