Thursday, July 31, 2025
27.2 C
Colombo
கிழக்குஅம்பாறை கடற்கரையில் சுற்றித்திரியும் விச ஜந்துக்கள்

அம்பாறை கடற்கரையில் சுற்றித்திரியும் விச ஜந்துக்கள்

அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த ஆற்று முகத்துவாரம் வெட்டப்பட்டன.

இதனால் ஆறுகளில் தேங்கிய நீர் வெள்ளம் கடலை சென்று சங்கமித்ததுடன் ஆற்றில் இருந்த விச ஜந்துக்கள் கடற்கரை ஓரங்களில் நடமாடி வருகின்றன.

இவ்விச ஜந்துக்கள் இம்மாவட்டத்தில் மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை, நிந்தவூர்,
அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில் பகுதிகளில் நடமாடி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles