Sunday, September 14, 2025
31.1 C
Colombo
வடக்குஇளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் - விசாரணையில் தகவல்

இளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் – விசாரணையில் தகவல்

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி உள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைக்குண்டை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்கு கொடுத்தாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் திருட்டு பொருட்களை இளைஞனிடம் வாங்கிய குற்றச்சாட்டில், நேற்றைய தினம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் திருடப்பட்டதாக கருதப்படும் இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் மீட்டனர்.

இருவரையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles