Sunday, August 24, 2025
25.6 C
Colombo
வடக்குவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவிக்கு பிணை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவிக்கு பிணை

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன்இ மற்றய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles