Saturday, January 17, 2026
26 C
Colombo
ஏனையவைமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு

பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ‘குரு அபிமானி’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆசிரியருக்கும் 2,500 ரூபா வழங்கப்படும் என்றும், அந்தத் தொகை இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles