Wednesday, April 30, 2025
27 C
Colombo
வடக்குபுளியங்குளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

புளியங்குளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்காவலைக்கு செல்லும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சோதனை செய்த போது ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச்சென்ற அடிப்படையில் பொல்காவலையை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு புளியங்குளம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு ள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles