Sunday, August 10, 2025
28.9 C
Colombo
வடக்குஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் - வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்தார்.

அதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பில் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள் இ பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles