பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை – பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன், மற்றைய இரு வாகனங்களும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.