Friday, January 17, 2025
24.3 C
Colombo
வடக்குயாழில் 86 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

யாழில் 86 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபா பெறுமியான போதைப்பொருட்கள் நேற்று பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த பொதிகளை சோதனை செய்தனர்.

அதில் இருந்து 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும், 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபா எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles