சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் தொடர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் உட எல்லபொல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெறுகிறது.
அத்தோடு பலாங்கொடை பிரதான நகரத்தின் மேல் பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் பலாங்கொடை புதிய வீதியில் பாதசாரிகள் நடை பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதசாரிகள் கடும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.