மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட 10 நம்பர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக இருந்த 300 கிலோ லீக்ஸை திருடி நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 6 ம் திகதி இரவு கவரவலை தோட்டத்தை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தாம் லீக்ஸை திருடி நோர்வூட் நகரில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அனைத்து தொடர்ந்து நேற்று சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.