கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வவுனியா பூந்தொட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.