நேற்றைய தினம் 96 வயது பெண் ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கிணற்றிலிருந்து நீரை எடுக்க முயன்றவேளை கிணற்றினுள் விழுந்தது உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.