Thursday, January 16, 2025
25 C
Colombo
வடக்குமாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை: விசாரணை முன்னெடுப்பு

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை: விசாரணை முன்னெடுப்பு

பேஸ்புக் மற்றும் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு உதவிய பெண்ணொருவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதற்கமைய குறித்த பெண்ணின் கணவரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதுடன் இப்பெண் மற்றுமொரு ஆணுடன் உறவினை பேணியதை தொடர்ந்து இப்போதைப்பொருள் வலையமைப்பினை நடாத்தி வருகின்றார்.

இப்பெண்ணின் போதைப்பொருள் வலையமைப்பில், பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களை பயன்படத்தி இடங்களை குறிப்பிட்டு ஐஸ் மற்றும் இதர போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் விசேட போதைப்பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அண்மையில் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles