Friday, January 17, 2025
28.2 C
Colombo
வடக்குமட்டு கள்ளியங்காடு மயானத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர்

மட்டு கள்ளியங்காடு மயானத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டிடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் இன்று(03) பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல மயானத்தில் கடமையாற்ற சென்றிருந்த நிலையில் இன்று பகல் 2 மணியளவில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles