பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்ததாக அவர் வெளியிட்ட பதிவுகள் வைரலாகி வருகின்றன.
ஜப்பானில் ஹொன்ஷு தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட ஜூனியர் என்டிஆர் தனது குடும்பத்தாருடன் ஜப்பான் சென்றிருந்தார்.
அவர் கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் இருந்துள்ளதுடன், நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அவர் ஜப்பானில் இருந்தது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பதிவில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானில் இருந்து இன்று தான் வீடு திரும்பினேன்.அங்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் ஜப்பானில்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நிலநடுக்க பாதிப்புகளில் இருந்து மீள வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள் ஜப்பான் என பதிவிட்டுள்ளார்.