Monday, March 16, 2026
30.6 C
Colombo
வடக்கு7 கிலோ மாவாவுடன் இளைஞன் கைது

7 கிலோ மாவாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு, மாவா விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞன் ஒருவர் மாணவர்களுக்கு மாவா விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்த இளைஞனை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து சுமார் 7 கிலோ மாவாவை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles