மதுபானத்தின் விலையும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெட் வரி அதிகரிப்புடன் மதுபான விலையும் திருத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்தின் பிரகாரம், பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18 வீத VAT விதிக்கப்படவுள்ளது.