இந்தியப் பெருங்கடலில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.