Friday, January 17, 2025
28.2 C
Colombo
வடக்குபுலிச் சின்னம் பொறித்த ஆடையுடன் கைதான இளைஞனுக்கு பிணை

புலிச் சின்னம் பொறித்த ஆடையுடன் கைதான இளைஞனுக்கு பிணை

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது,

சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு, நேற்று எடுக்கப்பட்ட போது, கடந்த ஒரு மாத காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles