Sunday, November 17, 2024
27.7 C
Colombo
வடக்குவவுனியாவில் 1,253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை

வவுனியாவில் 1,253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை

வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்கான கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியினால் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து இம்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான சத்திர சிகிச்சை முகாம் 21 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 1253 பேர் கண் சத்திர சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

கடந்த 11 ஆம் திகதி 188 பேரும், 12 ஆம் திகதி 230 பேரும், 13 ஆம் திகதி 172 பேரும், 14 ஆம் திகதி 153 பேரும், 18 ஆம் திகதி 172 பேரும், 19 ஆம் திகதி 56 பேரும், 20 ஆம் திகதி 157 பேரும், 21 ஆம் திகதி 125 பேரும் என கடந்த 8 நாட்களில் 1253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வட மாகாணத்தில் ஒரு தடவையில் அதிகளவானர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த சிகிச்சையானது முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பயனாளிகளை அழைத்து வருவதற்கும் வாகன ஒழுங்குகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles