ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


