Friday, April 4, 2025
24 C
Colombo
வடக்குபோதைப்பொருட்களுடன் 3 பெண்கள் கைது

போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து பெருமளவான பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரை கைது செய்து, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரிடமிருந்து 620 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 16 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 6 இலட்சத்து 78 ஆயிரத்து 900 ரூபா பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை 51 வயதான பெண்ணொருவர் 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும், மறுநாள் புதன்கிழமை 37 வயதான பெண்ணொருவர் 720 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் 23 ஆயிரம் ரூபா பணத்துடனும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles