Wednesday, April 30, 2025
27 C
Colombo
வடக்குஅதிபரால் மாணவன் துஷ்பிரயோகம்: மறுக்கிறது பாடசாலை நிர்வாகம்

அதிபரால் மாணவன் துஷ்பிரயோகம்: மறுக்கிறது பாடசாலை நிர்வாகம்

மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கடந்த 20 ஆம் திகதி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த செய்தியை கரிசல் பாடசாலை நிர்வாகம், கரிசல் ஆசிரியர் நலன்புரி சங்கம், மாணவர் உயர்தர ஒன்றியம், பழைய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கரிசல் பாடசாலையானது மிகுந்த அர்ப்பணிப்பும்,ஆளுமையும் உள்ள அதிபரின் நிர்வாக திறமையினால் மிகச் சிறந்த கல்வி அடைவை பதிவு செய்து வருகிறது.

எனினும் அண்மைய நாளில் இடம்பெற்ற ஒரு சிறிய சம்பவம் ஒன்று குறித்த பாடசாலையின் மீது கால் புணர்ச்சியும் அதிபர் மீது கொண்ட தனிப்பட்ட பகைமை காரணமாகவும் குறித்த சம்பவத்தை பெரிதாக திரிவுபடுத்தப்பட்டமைப்பு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறித்த செய்தி பாடசாலை சமூகத்திற்கும், கிராமத்திற்கும், அதிபருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

பாடசாலையின் மீது கால் புணர்ச்சியும் அதிபர் மீது கொண்ட தனிப்பட்ட பகைமை காரணமாகவும் குறித்த சம்பவத்தை பெரிதாக திரிவு படுத்தப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles