Thursday, April 3, 2025
26.2 C
Colombo
கிழக்குபெண் விமானப்படை சிப்பாய் துஷ்பிரயோகம்: கட்டளை அதிகாரி கைது

பெண் விமானப்படை சிப்பாய் துஷ்பிரயோகம்: கட்டளை அதிகாரி கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி சீனக்குடா விமானப்படை தளத்தில் 21 வயதுடைய பெண் விமானப்படை சிப்பாயை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மத்தள விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி ஒருவர் நேற்று மாலை திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு, குறித்த அதிகாரிக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் சீனக்குடா விமானப்படை தளத்தில் கோப்ரல் பதவியில் இருந்த ஒருவர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை சீனக்குடா பொலிஸார் திறம்பட நடத்தாத காரணத்தினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ன் பிரகாரம் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேராவின் தலையீட்டுடன் திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணையை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை திருகோணமலை மேலதிக நீதவான் திருமதி அண்ணாதுரை தர்ஷனி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சமன் சிகேராவின் பணிப்புரையின் பேரில்இ திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜீவேந்திர டயஸ் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles