Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
வடக்குமுள்ளியவளையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முள்ளியவளையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்து வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles