கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 2 அடி 6 அங்குலம் உயரமான 210 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களிடம் இருந்து 6,200 கிராம் காய்ந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
28 மற்றும் 35 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.