Tuesday, November 25, 2025
26.1 C
Colombo
வடக்குஆசிரியர்களுக்கிடையில் கைகலப்பு - ஒருவர் வைத்தியசாலையில்

ஆசிரியர்களுக்கிடையில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் இன்றையதினம் முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles