Wednesday, December 24, 2025
25.6 C
Colombo
வடக்குகூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை: மருத்துவ பீட மாணவன் கைது

கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை: மருத்துவ பீட மாணவன் கைது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மருத்துவ பீட மாணவர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 11 போதை மாத்திரைகள், 45 மதனபோதக வில்லைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மாணவர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 03ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 23 வயதான சியம்பலாவெவ – ரம்பேவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles