முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அவசர வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி பிரதேசத்தின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரித்து வருவதால் 32 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகள் குழுவினர் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த கிராமத்திற்கு சென்று பெரும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பணிக்கன்குளம், இந்துபுரம், பண்டாரவன்னி, தட்டார்மலை, புளியங்குளம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 700 குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.`