இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான இறுதியான மற்றும் உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15) நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக 1,300 வீடுகளை அமைப்பதற்கான பணி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15) நடைபெற்றது.