யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளன.
அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.